கனடாவின் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியைச் சேர்ந்த கேட்லின் ப்ரான் (Kaitlyn Braun) என்ற முன்னாள் சமூக சேவகி, தாம் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறி, பிரசவக் கால உதவியாளர்களை (Doulas) ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
அதனையடுத்து, அவர் தனது சமூக சேவைப் பதிவை நிரந்தரமாகத் துறந்துள்ளார்.
ஒன்டாரியோ சமூக சேவையாளர்கள் மற்றும் சமூக சேவைப் பணியாளர்கள் கல்லூரி (Ontario College of Social Workers and Social Service Workers) நடத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன் ஆஜரான இவர், இனி எப்போதும் இத்துறையில் பணியாற்ற மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
இவர் 2022 முதல் 2023 வரை 13-க்கும் மேற்பட்ட உதவியாளர்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து கட்டணமின்றி சேவைகளைப் பெற்றதாகவும், தவறான பாலியல் வன்கொடுமை புகார்களை அளித்ததாகவும் நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.
குற்றவியல் வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செலவுத் தொகையாக $5,000 டாலர்களைச் செலுத்துமாறும், கனடாவிலோ அல்லது வேறு எந்தப் பகுதியிலோ மீண்டும் சமூக சேவை செய்யத் தடை விதிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
