Mississauga-வில் இரண்டு நாட்களில் 71 வாகனங்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 3 மற்றும் 6ஆம் திகதிகளின் அதிகாலை நேரங்களில் Mississauga-வின் பல குடியிருப்புப் பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக Peel Regional Police தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் குற்றச்சாட்டின்படி, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாமல் இருந்த கதவுகளை திறந்தோ உள்ளே நுழைந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களின்போது எந்த வாகனமும் திருடப்படவில்லை. இருப்பினும், வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களாலும் திருடப்பட்ட பொருட்களாலும் உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து நிரந்தர முகவரி இல்லாத 34 வயதான Cory Lowden என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய பிராந்தியங்களில் இடம்பெற்ற இதேபோன்ற வாகன குற்றங்களுடனும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
