கனடாவில் வீட்டு விற்பனை 6.9% சரிவு – மீண்டும் வட்டி உயருமா என அச்சம்

கனடாவின் வீட்டு சந்தையில் மீண்டும் மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

Canadian Real Estate Association, வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் வீட்டு விற்பனை கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.9 சதவீதம் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 37,504 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் பணவீக்க அபாயம் மற்றும் மீண்டும் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற அச்சம் பொருளாதார சூழலை பலவீனப்படுத்தியுள்ளதாக CREA-வின் Senior Economist Shaun Cathcart தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால், ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் வீட்டு விற்பனை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வீட்டு விலைகளில் பெரிய சரிவு பதிவாகவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு வீட்டின் தேசிய சராசரி விலை 668,219 கனடிய டொலர்களாக இருந்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.6 சதவீதம் அதிகமாகும்.

மேலும் சந்தைக்கு புதிதாக வந்த வீட்டு பட்டியல்கள், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில் 3.3 சதவீதம் அதிகரித்துள்ளன.

Related Articles

Latest Articles