கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் Mark Carney-யின் ஐரோப்பிய பயணம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்தப் பயணத்தில், Carney பிரான்சின் Strasbourg மற்றும் பிரிட்டனின் Liverpool ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடாவின் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், தனது சர்வதேச வர்த்தகத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த கனடா முயற்சி செய்து வருகிறது.
அதன் ஒரு முக்கிய பகுதியாகவே ஐரோப்பாவுடன் ஒரு “unique alliance” — அதாவது புதிய வகையிலான தனித்துவமான கூட்டுறவை உருவாக்க Carney விரும்புகிறார்.
இந்த புதிய கூட்டுறவில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புடன், critical minerals, Arctic security, artificial intelligence, digital commerce, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழிலாளர் வாய்ப்புகள் உள்ளிட்ட பல துறைகள் இடம்பெறலாம்.
மேலும், கனடா – ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான CETA வர்த்தக ஒப்பந்தத்தை இதுவரை ratify செய்யாத ஐரோப்பிய நாடுகளையும் சம்மதிக்கச் செய்வது கனடாவின் மற்றொரு இலக்காக உள்ளது.
அமெரிக்காவை மட்டுமே அதிகமாக சார்ந்திருப்பதை குறைத்து, ஐரோப்பா உள்ளிட்ட புதிய சந்தைகளுடன் உறவை விரிவுபடுத்துவதற்கான கனடாவின் முக்கிய நகர்வாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
