போலி வாகன காப்புறுதி விற்பனை: Mississauga இளைஞர் கைது

Greater Toronto Area முழுவதும் போலியான வாகன காப்புறுதிகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் Mississauga-வைச் சேர்ந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Muhammad Raahim என்பவர், April 2024 முதல் August 2026 வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கு போலியான Auto Insurance Policies-ஐ விற்பனை செய்ததாக Peel Regional Police குற்றஞ்சாட்டியுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, வாடிக்கையாளர்களுக்கு உண்மையானது போன்று தோற்றமளிக்கும் போலியான Proof of Insurance ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் தங்களுக்கு முறையான வாகன காப்புறுதி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பியதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இந்த மோசடியுடன் தொடர்புடைய 15 சம்பவங்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த இழப்பு 10,000 கனடிய டொலருக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் முன்னர் Insurance விற்பனை செய்வதற்கான licence பெற்றிருந்ததுடன், பல Insurance Brokerages-ல் பணியாற்றியிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சட்டபூர்வமாக Insurance விற்பனை செய்வதற்கான அதிகாரம் இல்லாத நிலையிலும் அவர் தொடர்ந்து Policies விற்பனை செய்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

August 26 அன்று Muhammad Raahim கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles