பெட்ரோல் விலை குறைகிறது! GTA-வில் 7¢ குறைவு!

GTA பகுதியில் உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப திட்டமிட்டிருந்தால், வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவலாம்.

கனடாவின் எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague வெளியிட்டுள்ள தகவலின்படி, GTA பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 சென்ட் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சென்ட் விலை அதிகரிப்புக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 180.9 சென்டாகக் குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, அடுத்த வாரம் செப்டம்பர் 17ஆம் திகதி காலப்பகுதியில் பெட்ரோல் விலை மேலும் சுமார் 7 சென்ட் குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறைந்த செலவுடைய குளிர்கால பெட்ரோல் கலவைக்கு — மாறவுள்ளதுதான்.

ஆனால் டீசல் பயன்படுத்தும் வாகனங்களுக்கு நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

வெள்ளிக்கிழமை டீசல் விலை லிட்டருக்கு 9 சென்ட் அதிகரித்து, 245.9 சென்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

டீசல் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ள நிலையில், குளிர்காலத்தில் அது மேலும் அதிகரித்தால் பொருட்களின் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Latest Articles