“கனடிய டொலரின் மதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது!” – ட்ரம்பின் புதிய எச்சரிக்கை

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது கனடிய டாலரின் மதிப்பையும் நேரடியாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் Donald Trump.

ஞாயிற்றுக்கிழமை Truth Social-ல் பதிவிட்ட Trump, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது கனடிய டாலரில் காணப்படும் மதிப்பு வேறுபாடு “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார்.

“இது பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த நாணய மதிப்பு தொடர்பாக அமெரிக்கா என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறது அல்லது Trump என்ன நடவடிக்கையை முன்வைக்கிறார் என்பது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் ஒரு டொலர் 38 சென்ட் கனடியப் பணம் கிடைக்கிறது. அதாவது ஒரு கனடிய டாலரின் மதிப்பு சுமார் 72 அமெரிக்க சென்ட்கள்.

அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது கனடிய டாலர் குறைந்த மதிப்பில் இருப்பது புதிதல்ல. இதனால் கனடியப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் ஒப்பீட்டளவில் மலிவாக அமையலாம். அதேவேளை, அமெரிக்காவிலிருந்து பொருட்களை வாங்கும் கனடியர்களுக்கு அவை அதிக விலையாகலாம்.

ஏற்கனவே கடுமையாகியுள்ள கனடா–அமெரிக்க வர்த்தக மோதலில், தற்போது கனடிய டாலரின் மதிப்பும் புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Articles

Latest Articles