Ontario-வில் E-Scooter பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Stratford, St. Marys, Perth South ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் Electric Kick-Scooter பயன்படுத்துவது தற்போது அனுமதிக்கப்படவில்லை என Stratford Police தெரிவித்துள்ளது.
Ontario அரசு 2019ஆம் ஆண்டு Electric Kick-Scooters தொடர்பான pilot project ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு நகரம் அல்லது municipality-யில் e-scooter பயன்படுத்த வேண்டுமெனில், அந்த உள்ளாட்சி நிர்வாகம் அதற்கான தனியான by-law-ஐ நிறைவேற்றி அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் Stratford, St. Marys, Perth South ஆகிய மூன்று பகுதிகளிலும் இதுவரை அத்தகைய by-law கொண்டுவரப்படவில்லை.
இதனால் அந்தப் பகுதிகளில் roads, sidewalks, trails, paths, walkways மற்றும் public parks உள்ளிட்ட பொது இடங்களில் e-scooter பயன்படுத்துவது சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை.
சமீப காலமாக இந்தப் பகுதிகளில் e-scooter பயன்பாடு அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு இந்த விதியை நினைவூட்டுவதாக Stratford Police தெரிவித்துள்ளது.
Ontario-வின் pilot விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட e-scooter ஒன்று அதிகபட்சமாக மணிக்கு 24 கிலோமீட்டர் வேகம், 500 watts motor power ஆகிய வரம்புகளுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுபவருக்கு குறைந்தது 16 வயது இருக்க வேண்டும்.
விதிகளை மீறினால் $250 முதல் $2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என Ontario அரசு தெரிவிக்கிறது.
எனவே E-Scooter வைத்திருப்பவர்கள், அதை பயன்படுத்துவதற்கு முன் தங்கள் municipality-யில் அதற்கு அனுமதி உள்ளதா என்பதை சரிபார்ப்பது முக்கியம்.
