கனடாவில் பிரபலமான ‘Compliments’ பிராண்டின் தயாரிப்புகள் Recall!

கனடாவில் பிரபலமான ‘Compliments’ பிராண்டின் ‘Smashed 100% Chicken Burgers’ அட்டைப் பொட்டலத்தில் முட்டை சேர்க்கப்பட்ட விபரம் குறிப்பிடப்படாததால், அந்த தயாரிப்புகள் மீளழைக்கப்பட்டுள்ளன.

Leadbetter Foods Inc. நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் 680 கிராம் எடையுள்ள (84 கிராம் எடை கொண்ட 8 பர்கர்கள்) இந்தத் தயாரிப்புகளுக்குக் கனடிய உணவுப் பரிசோதனை முகவாண்மை (CFIA) ‘Class 2’ வகை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முட்டை ஒவ்வாமை (Allergy) உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், UPC குறியீடு 0 55742 58333 5 கொண்ட இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை இதனால் யாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் புகார்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles