கனடாவின் Brampton பகுதியில் பெண் ஒருவரிடமும், இளம் பெண் ஒருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை Peel Regional Police தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திங்கட்கிழமை மதியம் Bramalea City Centre பகுதியில் கடைவலமிலிருந்த 20 வயது பெண்ணை பின்னாலிருந்து நெருங்கி நபர் ஒருவர் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
அந்த பெண் அவரைத் தள்ளிவிட்டு தப்பித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
அதனையடுத்து, மதியம் 2 மணி அளவில் Bramalea Terminal பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, அவர் செல்ல முயன்றபோது அந்த நபரே மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் 35 முதல் 40 வயதுடைய கருப்பினத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.










