Canada–U.S. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் மத்தியில், அமெரிக்க மதுபானங்களை மீண்டும் LCBO கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருவது தொடர்பாக விவாதம் தீவிரமடைந்துள்ளது.
Donald Trump அரசாங்கம் கனடிய பொருட்கள் மீது விதித்த வரிகளுக்கு பதிலடியாக, 2025 மார்ச் மாதம் முதல் Ontario-வில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனை நிறுத்தப்பட்டது.
Wine, beer, spirits உள்ளிட்ட 3,600-க்கும் அதிகமான அமெரிக்க தயாரிப்புகள் LCBO விற்பனையில் இருந்து நீக்கப்பட்டன.
ஆனால் தற்போது Canada–U.S. வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிப்பது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
Ontario Premier Doug Ford, கனடாவின் முக்கிய தொழில்துறைகளை பாதுகாக்கும் “நியாயமான ஒப்பந்தம்” கிடைத்தால் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் கொண்டுவருவதற்கு தயாராக இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் Ontario-வில் சில வாடிக்கையாளர்களின் பதில் வேறுவிதமாக உள்ளது.
அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் வந்தாலும் அவற்றை வாங்கப்போவதில்லை என்றும், கனடிய தயாரிப்புகளை பயன்படுத்த பழகிவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அமெரிக்க தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்க விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
அண்மையில் வெளியான Abacus Data கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க மதுபானங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ள மாகாணங்களில் கருத்து தெரிவித்தவர்களில் 69 சதவீதம் பேர் தடையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Alberta மற்றும் Saskatchewan ஏற்கனவே அமெரிக்க மதுபானங்களுக்கான தடையை நீக்கியுள்ள நிலையில், Ontario உள்ளிட்ட பல மாகாணங்களில் தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
அப்படியானால் அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் LCBO அலமாரிகளுக்கு வந்தால், கனடியர்கள் அவற்றை மீண்டும் வாங்குவார்களா?
அல்லது “Buy Canadian” மனநிலை தொடர்ந்து நீடிக்குமா?
