கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பயணம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது!
கடந்த ஆண்டு Canada–U.S. அரசியல் மற்றும் வர்த்தகப் பதற்றங்களுக்குப் பின்னர், அமெரிக்காவுக்குச் செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்திருந்தது.
ஆனால் தற்போது நிலைமை மெதுவாக மாறிவருவதை புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
Statistics Canada வெளியிட்ட ஜூலை மாத ஆரம்பகட்டத் தரவுகளின்படி, அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குத் திரும்பிய கனடியர்களின் பயணங்கள் சுமார் 2.3 மில்லியனாக பதிவாகியுள்ளன.
இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 10.2 சதவீத அதிகரிப்பு. தொடர்ந்து நான்காவது மாதமாக அமெரிக்கப் பயணங்களில் வருடாந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
குறிப்பாக, காரில் அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய கனடியர்களின் பயணங்கள் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால் விமானப் பயணம் இன்னும் முழுமையாக மீளவில்லை.
அதேநேரம், அமெரிக்கர்களும் அதிகளவில் கனடாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் அமெரிக்கர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் சுமார் 2.7 மில்லியன். இது கடந்த ஆண்டைவிட 6.5 சதவீதம் அதிகம்.
அமெரிக்கர்களின் கனடா பயணம் தொடர்ந்து ஆறாவது மாதமாக வருடாந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இவ்வாறு Canada–U.S. எல்லைப் பயணம் மீண்டும் அதிகரிக்கும்போதிலும் வர்த்தக மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு முன்பு இருந்த நிலையை அது இன்னும் எட்டவில்லை.
