Quebec-ல் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட Maple Syrup விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே Quebec Maple Syrup உற்பத்தியாளர் மீது தொடுக்கப்பட்ட Class Action வழக்கு, தற்போது கனடாவின் முக்கிய Grocery நிறுவனங்களான Metro, Sobeys, Loblaw, Groupe Épicia ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த Maple Syrup உண்மையில் “pure” அல்லது முழுமையாக Quebec-ல் உற்பத்தி செய்யப்பட்டதா என்பது குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லது சந்தேகித்திருக்க வேண்டும் என திருத்தப்பட்ட வழக்கு மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் அந்த syrup கிடைத்தது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருந்திருக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வாதிடுகிறது.
Quebec-ல் பல Grocery Stores-ல் வாங்கப்பட்ட சம்பந்தப்பட்ட Maple Syrup மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, அவற்றில் cane sugar கலந்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கனடாவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் Maple Syrup-ஐச் சுற்றி ஆரம்பித்த இந்த சர்ச்சை, தற்போது ஒரு தனி உற்பத்தியாளரைத் தாண்டி நாட்டின் மிகப்பெரிய Grocery நிறுவனங்களையும் சட்டப் போராட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
