Markham-ல் ஒரே வாரத்தில் 3 பெண்களுக்கு பாலியல் தாக்குதல் – சந்தேக நபரை தேடும் பொலிஸ்!

Markham பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை York Regional Police கோரியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10, 14, 17ஆம் திகதிகளில் இந்த மூன்று சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மூன்று சம்பவங்களும் Markham Road மற்றும் Roy Rainey Avenue-க்கு இடைப்பட்ட Edward Jeffreys Avenue பகுதியில், மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் திகதி மாலை Edward Jeffreys Avenue மற்றும்  Mingay Avenue அருகே நடந்து சென்ற பெண்ணை சைக்கிளில் வந்த ஒருவர் கடந்து செல்லும்போது, பாலியல் நோக்கத்துடன் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் திகதி இரவு Edward Jeffreys Avenue மற்றும் Roy Rainey Avenue பகுதியில் நடந்து சென்ற மற்றொரு பெண்ணை சந்தேக நபர் சைக்கிளில் கடந்துசென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து, அவரையும் பாலியல் நோக்கத்துடன் தொட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது சம்பவம் ஆகஸ்ட் 17ஆம் திகதி இரவு அதே பகுதியில் இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் வந்த சந்தேக நபர் மற்றொரு பெண்ணை பாலியல் நோக்கத்துடன் தொட்டுவிட்டு தப்பிச் சென்றதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மூன்று சம்பவங்களிலும் ஒரே சந்தேக நபரே தொடர்புபட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

சந்தேக நபர் சுமார் 18 வயதுடைய ஆண், South Asian தோற்றம் கொண்டவர் என்றும், நடுத்தர நிறம் கொண்டவர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளார்.

அவர் கறுப்பு நிற சைக்கிள் ஒன்றைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் படங்களையும் York Regional Police வெளியிட்டுள்ளது.

இந்த நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது சம்பவங்கள் தொடர்பாக தகவல் வைத்திருப்பவர்கள் பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Markham பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த மூன்று சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
Toronto-வில் புதிய சுகாதார எச்சரிக்கை!
01:38
Video thumbnail
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் விமானி எங்கே?
01:19
Video thumbnail
CA-US 50% Trump Tariff-க்கு Countdown ஆரம்பம்!
01:47
Video thumbnail
🌧️🏠 வெள்ளம் வந்தால் வீட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை... உங்கள் Insurance bill-க்கும் பாதிப்பு!
01:23
Video thumbnail
🚲❌ Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!
01:29
Video thumbnail
💻❌ Laptop வேண்டாம்... ✍️ கையால் எழுதுங்கள்!AI காலத்தில் மீண்டும் பேனை, பேப்பரா? 🤔
01:49
Video thumbnail
Scarborough-வில் பரபரப்பு! 🔍 கண்டெடுக்கப்பட்டது உண்மையில் மனித உடல் எச்சங்களா?
00:44
Video thumbnail
⚠️ Burlington-ல் வௌவாலுக்கு Rabies உறுதி!
01:13
Video thumbnail
கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழருக்கு நேர்ந்த சோகம்...
01:14
Video thumbnail
தமிழர் தெருவிழா சொல்லும் கதை என்ன? அதன் பின்னணி என்ன?
33:43

Related Articles

Latest Articles