Scarborough விலுள்ள industrial plaza ஒன்றின் பின்புறத்தில் மனித உடல் எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து Toronto Police விசாரணையை ஆரம்பித்துள்ளது.
Ellesmere Road மற்றும் Markham Road பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், industrial plaza பின்புறத்தில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து industrial plaza முழுவதும் தேடுதல் மேற்கொண்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்டவை உண்மையிலேயே மனித உடல் எச்சங்களா, அவை யாருடையவை, சம்பவத்தின் பின்னணியில் குற்றச்செயல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.










