Brampton-ல் ரகசிய கஞ்சா பண்ணை முறியடிப்பு! $1.5 மில்லியன் மதிப்பு — சுமார் 4,000 செடிகள் பறிமுதல்

Brampton-ல் இயங்கிவந்ததாகக் கூறப்படும் பாரிய சட்டவிரோத கஞ்சா உற்பத்தி காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Brampton-ன் Rutherford Road South பகுதியில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் இந்த சட்டவிரோத கஞ்சா உற்பத்தி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி, வேறொரு விசாரணையின் ஒரு பகுதியாக Toronto Police அங்கு தேடுதலுக்காக சென்றபோது, பெரிய அளவிலான கஞ்சா உற்பத்தி நடைபெறுவது தெரியவந்ததாக Ontario Provincial Police தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து Health Canada மேற்கொண்ட விசாரணையில், அந்த இடத்தில் கஞ்சா வளர்ப்பதற்கான எந்தப் பதிவு அல்லது உரிமமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுநாள் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 4,000 Cannabis செடிகள், 23 கிலோகிராமுக்கும் அதிகமான பதப்படுத்தப்பட்ட கஞ்சா பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 1.5 மில்லியன் டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles