Toronto-வைச் சேர்ந்த முன்னாள் flight attendant ஒருவர், தன்னை commercial airline pilot எனக் காட்டி நூற்றுக்கணக்கான இலவச விமானப் பயணங்களை பெற்ற மோசடி வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
34 வயதான Dallas Pokornik, 2020 ஜனவரி முதல் 2024 அக்டோபர் வரை போலியான employee identification card ஒன்றைப் பயன்படுத்தி, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விமான நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான இலவச விமான பயணங்களை மேற்கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Pokornik முன்பு கனடிய விமான நிறுவனம் ஒன்றில் flight attendant ஆக பணியாற்றியவர். பின்னர் தன்னை pilot என தவறாகக் காட்டி airline employee travel benefits-ஐ பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 அக்டோபரில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பின்னர் Panama-வில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்பட்டார். தற்போது மூன்று விமான நிறுவனங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கான தண்டனை December 8 அன்று அறிவிக்கப்படவுள்ளது. Wire fraud குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் $250,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒரு போலி employee ID பயன்படுத்தி பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான flights பெற முடிந்தது எப்படி? Airline security system-ல் இருந்த குறைபாடு என்ன? என்பதே தற்போது எழும் முக்கிய கேள்வி.
