British Columbia-வில் வேகமாகப் பரவி வரும் Bald Range காட்டுத்தீ, பெரும் அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது.
Summerland மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், B.C. அரசு மாகாணம் முழுவதற்குமான அவசரநிலையை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஆரம்பமான தீ, கடும் காற்று மற்றும் வறண்ட சூழல் காரணமாக மிக வேகமாகப் பரவியது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தீ 10,340 hectares பரப்பளவை எட்டியதுடன், இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
Summerland-ல் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் அழிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிலர் தீ பரவிய பகுதிகளுக்குள் சிக்கியதால், வான்வழி மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மத்திய அரசும் முன்வந்துள்ளது.










