ஒரு பாடசாலை பேருந்தின் அளவுள்ள SpaceX ராக்கெட் துண்டொன்று அதிவேகமாக நிலவை மோதவுள்ளது!
2025 ஜனவரி மாதம் இரண்டு தனியார் lunar landers வாகனங்களை விண்ணில் செலுத்திய Falcon 9 ரொக்கெட்டின் துண்டே இது.
சுமார் நான்கு தொன் எடையுள்ள இந்த ராக்கெட் பகுதி, கனடாவின் கிழக்கு நேரப்படி ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் நிலவை மோதும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில், நிலவின் Einstein Crater பகுதிக்கு அருகில் இந்த மோதல் நிகழவுள்ளது.
இதனால் நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஒன்று உருவாகுவதுடன், தூசி மற்றும் பாறைத் துகள்கள் பல கிலோமீட்டர் உயரத்திற்கு எழக்கூடும்.
ஆனால் இதனால் பூமிக்கோ, மக்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.
மோதலை வெறும் கண்களால் பார்ப்பது கடினம் என்றாலும், சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் நிலவைச் சுற்றிவரும் விண்கலங்கள் மூலம் அதன் விளைவுகளைப் பதிவு செய்ய விஞ்ஞானிகள் தயாராகியுள்ளனர்.
