கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு: மளிகைப் பொருட்களுக்குப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு!

கனடாவில் (Canada) ஜூன் மாதத்தில் பொதுப் பணவீக்கம் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ள போதிலும், மளிகைப் பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மளிகைப் பொருட்களுக்கான பணவீக்கம் 3.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், கடந்த 5 ஆண்டுகளில் இதன் விலைகள் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

கோழி இறைச்சியின் விலை 5.7 சதவீதமும், ரொட்டி வகைகளின் விலை 6 சதவீதமும் உயர்ந்துள்ளன.

மெக்சிகோவிலிருந்து (Mexico) இறக்குமதி செய்யப்படும் தக்காளிப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் காட்டுத் தீ காரணமாகப் பயிர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மொன்றியல் (Montreal) போன்ற நகரங்களில் குடும்பங்கள் பாடசாலை உபகரணங்களை வாங்குவதைக் குறைத்துள்ளன.

அடிப்படை உணவிற்கே முன்னுரிமை அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles