கனடிய புட்பால் வீரர் ஜெய்டன் டால்கே (Jayden Dalke) கார் விபத்தில் உயிரிழப்பு!

கனடாவின் சாஸ்காட்செவன் ராப்ரைடர்ஸ்‘ (Saskatchewan Roughriders) புட்பால் அணியின் தலைவரும் பிரபல லைன்பேக்கருமான (linebacker) 30 வயதான ஜெய்டன் டால்கே (Jayden Dalke), கோர கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்த அதிர்ச்சித் தகவலை அவரது அணி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டாவின் லெடூக் (Leduc, Alta.) பகுதியைச் சேர்ந்த ஜெய்டன் டால்கே, 2022-ஆம் ஆண்டு ராப்ரைடர்ஸ் அணியில் இணைந்தார்.

தனது 68 போட்டிகள் கொண்ட தொழில்முறை வாழ்க்கையில் 2025-ஆம் ஆண்டின் கிரே கப்‘ (Grey Cup) வெற்றி உட்பட பல முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியின் நம்பிக்கைக்குரிய வீரராகத் திகழ்ந்தார்.

இவரது திடீர் மறைவு சக வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடிய புட்பால் லீக் (CFL) கமிஷனர் ஸ்டீவர்ட் ஜான்சன் (Stewart Johnson), சாஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ (Scott Moe) மற்றும் பல விளையாட்டு அமைப்புகளும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் (RCMP) தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

Related Articles

Latest Articles