றொரண்டோ இந்த ஆண்டின் மிக வெப்பமான தினத்தை காணப்போகிறது!

றொரண்டோ (Toronto) நகரம் இந்த ஆண்டின் மிகக் கடுமையான மற்றும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகின்றது.

அங்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை (Yellow heat warning) விடுக்கப்பட்டுள்ளதுடன், ஈரப்பதத்தின் தாக்கம் (Humidex) 40 பாகை செல்சியஸைக் கடந்து பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலை நிபுணர் டெனிஸ் ஆண்ட்ரியாச்சி (Denise Andreacchi) கருத்துத் தெரிவிக்கையில், “றொரண்டோ நகரம் 2026 ஆம் ஆண்டில் இதுவரை கண்டிராத மிகத் தீவிரமான வெப்பத்தை செவ்வாய்க்கிழமை (இன்று) எதிர்கொள்ளும்” என்றார்.

கடந்த ஜூலை 1 (Canada Day) அன்று பியர்சன் விமான நிலையத்தில் (Pearson Airport) பதிவான 36 பாகை செல்சியஸ் வெப்பநிலையை விட இன்றைய வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், 1995 ஆம் ஆண்டின் சாதனையும் இதனால் முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கடும் வெப்ப நிலை வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க, 136 ஸ்பதினா வீதியில் (136 Spadina Road) 24 மணி நேர குளிரூட்டப்பட்ட தற்காலிக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரின் பூங்காக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நீச்சல் குளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீடிக்கப்பட்ட நேரங்களுடன் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அலெக்ஸ் டஃப் (Alex Duff) மற்றும் மொனார்க் பார்க் (Monarch Park) உள்ளிட்ட 8 பிரதான நீச்சல் குளங்கள் இரவு 11:45 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles