கனடாவில் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்து அசத்தும் 11 வயது கனடிய சிறுவன் – குவியும் பாராட்டு!

கனடாவின் யார்க் பிராந்தியத்தைச் (York Region) சேர்ந்த Ashton Meyer என்ற 11 வயது சிறுவன், வீடுகளுக்குச் சென்று குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்து தரும் ‘YourBinCleaning’ என்ற தனது சுய தொழிலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறான்.

கடந்த மே மாதம் தனது தந்தையின் ஆலோசனையின் பேரில், வயதானவர்களுக்கு உதவும் நோக்கோடும், பணம் சம்பாதிக்கும் இலக்கோடும் தலா 10 டாலர் கட்டணத்தில் இத்தொழிலை அவன் தொடங்கினான்.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், நிராகரிப்புகளுடனும் தொடங்கிய இவனது பயணத்தில், தற்போது 40-க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இவனது தாய் சமூக ஊடகங்களில் பகிர்ந்த Ashton-இன் உழைப்பு குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று, ஜூன் 22 முதல் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று வைரலாகியுள்ளதுடன், 85,000-க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

இவனது உழைப்பைப் பாராட்டி பலர் நிதியுதவி வழங்கி வருவதால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக இச்சேவையை வழங்க Ashton திட்டமிட்டுள்ளான்.

மேலும், இலையுதிர் காலத்தில் இலைகளை அள்ளுவதற்கும், குளிர்காலத்தில் பனியை அகற்றுவதற்கும் தனது தொழிலை விரிவுபடுத்த இச்சிறுவன் திட்டமிட்டுள்ளதாக அவனது தந்தை Jonathan Meyer பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles