கனடாவில் Tavneos (avacopan) என்ற மருந்துக்கு ஒப்புதல் அளிக்க காரணமாயிருந்த மருத்துவ பரிசோதனை தரவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால் குறித்த மருந்தை புதிய நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என Health Canada எச்சரித்துள்ளது.
இரத்த நாள அழற்சியை ஏற்படுத்தும் ANCA-associated vasculitis என்ற அரிய வகை சுயவிவர நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு (autoimmune disease) இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதன் முக்கிய மூன்றாம் கட்ட பரிசோதனையான ADVOCATE trial தரவுகள் கையாண்ட விதத்தில் நம்பகத்தன்மை குறைந்துள்ளதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, New England Journal of Medicine இதழ் கடந்த ஜூன் 29 அன்று இந்த ஆய்வுக்கட்டுரையை திரும்பப் பெற்றுள்ளது.
மருந்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து Health Canada தற்போது தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறது.
அதுவரை புதிய நோயாளிகளுக்கு இம்மருந்தை வழங்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மருந்தை உட்கொண்டு வரும் நோயாளிகள், மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் திடீரென மருந்தை நிறுத்திவிட வேண்டாம் என்றும், தங்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










