துருக்கியின் (Turkiye) தலைநகர் அங்காராவில் (Ankara) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகக் கனடா பிரதமர் Mark Carney இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர் Donald Trump உடனான தூதரக ரீதியிலான முரண்பாடுகளைத் தவிர்த்து, பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிப்பது குறித்து உலகத் தலைவர்கள் இம்மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு நெதர்லாந்தின் The Hague நகரில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2035 ஆம் ஆண்டிற்குள் உறுப்பு நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தைப் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளன.
கனடா தனது 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாகவும், 2026-2027 நிதியாண்டில் இது 2.13 சதவீதமாக உயரும் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் Donald Trump தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte இதற்கான நம்பகமான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புத் துறைக்கான புதிய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும், கனடா முன்னெடுக்கும் ‘பாதுகாப்பு வங்கி’ (Defence Bank) திட்டம் குறித்தும் பிரதமர் Mark Carney இம்மாநாட்டில் விரிவாகப் பேசவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










