ஸ்காபரோவில் தட்டம்மை பரவல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு!

வெளிநாட்டுப் பயணத் தொடர்புடைய தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அனையடுத்து, ஸ்காபரோ (Scarborough) பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்குச் சென்றவர்களுக்கு தட்டம்மை பரவியிருக்கலாம் என றொரண்டோ பொது சுகாதாரத்துறை (Toronto Public Health – TPH) எச்சரித்துள்ளது.

அதன்படி Scarborough General Hospital (ER waiting room): ஜூன் 28, காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சென்று வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30, காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சென்று வந்தவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 29, காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை  ​ சென்று வந்தவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் அங்கு இருந்தவர்கள் ஜூலை 21 வரை தங்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், இருமல், கண்கள் சிவத்தல், தடிப்பு (Rash) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது றொரண்டோவில் 5 பேருக்கும், ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் 28 பேருக்கும் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடா முழுவதும் இதுவரை 1,079 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் கனடாவில் 5,462 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles