ஒரிலியா (Orillia) பகுதியில் உள்ள ஹைவே 11 (Highway 11) சாலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் பள்ளிப் பேருந்து ஒன்றும், எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.
ஒரோ-மெடொன்டே (Oro-Medonte) நகரியத்தின் லைன் 2 மற்றும் லைன் 3 பிரிவுகளுக்கு இடையே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கோடைகால முகாம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் அந்தப் பேருந்தில் இருந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை.
விபத்தினால் சேதமடைந்த தடுப்புச் சுவர்களைப் பழுதுபார்க்கவும், இடிபாடுகளை அகற்றவும் ஹைவே 11 சாலையின் இருபுறங்களும் பல மணிநேரம் மூடப்பட்டன.
இதுகுறித்த விசாரணைக்கு பின், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மீதும் மாகாண பொலிஸார் (OPP) குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவசரகால பிரேக் போடுவதற்கு ஏதுவாக வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை விடுமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.










