றொரண்டோ வணிக வளாகத்திற்கு வெளியே இருந்த பிரம்மாண்ட பலூன் குதிப்பகம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு!

கனடா தினத்தில் (Canada Day) றொரண்டோ (Toronto) வணிக வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய பிரம்மாண்டமான காற்றடைக்கப்படும் பலூன் குதிப்பகம் (Bouncy Castle) பலத்த காற்றில் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிடில்வுட் வணிக வளாகத்திற்கு (Bridlewood Mall) வெளியே அமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக பலூன் குதிப்பகம், கடந்த புதன்கிழமை அன்று வீசிய கடுமையான புயல் மற்றும் காற்றின் காரணமாக தலைகீழாகக் கவிழ்ந்து சரிந்தது.

இச்சம்பவத்தில் இருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றே இதற்கு காரணம் என இதனை நடத்திய ராயல் டக் (Royal Duck) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது உள்ளே இருந்த லியான் பலோமோ (Lian Palomo) என்ற பெண், இது ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவம் என்றும், நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தீவிர கேள்விகள் எழுவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து ஒன்ராறியோ தொழிலாளர் அமைச்சகம் (Ontario Ministry of Labour) விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles