சேதமடைந்த பைக்கு இழப்பீடு பெற 2.5 மாதங்கள் காத்திருந்த றொரண்டோ சமையற்கலைஞர்!

றொரண்டோவைச் (Toronto) சேர்ந்த பிரபல சமையற்கலைஞரும், ‘Antler’ உணவகத்தின் இணை உரிமையாளருமான மைக்கேல் ஹண்டர் (Michael Hunter), ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தால் சேதமடைந்த தனது பயணப் பைக்கு (Luggage) இழப்பீடு பெற இரண்டரை மாதங்கள் போராடியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 17 அன்று ஆஸ்டின் (Austin) நகரிலிருந்து றொரண்டோ பியர்சன் (Toronto Pearson) விமான நிலையம் திரும்பியபோது, அவரது $250 மதிப்புள்ள ‘Eddie Bauer’ ரகப் பை முற்றிலும் கிழிந்து சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து ஆன்லைனில் புகார் அளிக்க முடியாததால், அவர் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

எனினும், ஏர் கனடா நிறுவனம் அவருக்குப் பொருத்தமற்ற மாற்றுப் பையை வழங்க முன்வந்ததோடு, பின்னர் அவரது புகாரைத் தீர்க்காமலேயே ‘நெருக்கடி தீர்க்கப்பட்டுவிட்டது’ (Resolved) எனத் தவறாகக் காட்டியுள்ளது.

தான் ஏர் கனடாவின் ‘Aeroplan 50K Status’ கொண்ட முக்கிய வாடிக்கையாளர் என்பதைச் சுட்டிக்காட்டி, பலமுறை தொடர் முயற்சிகளை மேற்கொண்ட பிறகே, ஜூன் 29 அன்று அவருக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட வே ஒஉஉண்டும் என்றும், ஏர் கனடா போன்ற நிறுவனங்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்களது சொந்தக் கொள்கைகளை பயணிகள் மீது திணிக்க முயல்வதாகவும் விமானப் பயணிகள் உரிமைகள் அமைப்பின் நிறுவனர் காபோர் லுகாக்ஸ் (Gábor Lukács) குற்றம் சாட்டியுள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles