பிபா உலகிண்ண டிக்கெட் சர்ச்சை – StubHub மீது ரசிகர்கள் கூட்டு வழக்கு!

பிபா உலகிண்ண  போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தும் அவை வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, மறுவிற்பனை தளமான StubHub-க்கு எதிராக ரசிகர்கள் அமெரிக்காவில் கூட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மன்ஹாட்டன் (Manhattan) கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அதிக தொகை செலுத்தி வாங்கிய டிக்கெட்டுகள் இறுதிநேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், போட்டிகளை பார்க்க முடியாமல் ரசிகர்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டாலும், விமானப் பயணம் மற்றும் தங்குமிட செலவுகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு அது ஈடாகாது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை StubHub மறைமுகமாக நிராகரித்து, FIFA-வின் டிக்கெட் விநியோக அமைப்பில்தான் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளத்தின் மூலமே வாங்குமாறு FIFA ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கில், அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்காக குறைந்தது 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles