ஒன்றாரியோவில் புதிய வாகனக் காப்புறுதி விதிமுறைகள் அமுல் – வாகன சாரதிகள் அறிய வேண்டிய முக்கிய விபரங்கள்!

ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் வாகனக் காப்புறுதி (Auto Insurance) முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இது வாகன சாரதிகளுக்குத் தங்களது காப்புறுதித் திட்டங்களைத் தெரிவு செய்வதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) வழங்கினாலும், சில பாதுகாப்புகளைத் தவிர்ப்பதில் பெரும் அபாயங்கள் உள்ளதாகக் காப்புறுதி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

இதுவரை காப்புறுதித் திட்டங்களில் தானாகவே சேர்க்கப்பட்டிருந்த 9 வகையான விபத்துப் பலன்கள் (Accident benefits) இனி கட்டாயமில்லை, அவை விருப்பத்தேர்வாக (Optional) மாற்றப்பட்டுள்ளன.

இதில் வருமான இழப்பீடு (Income replacement), பராமரிப்பாளர் பலன்கள் (Caregiver benefits), வீட்டுப் பராமரிப்பு, மரண மற்றும் இறுதிச்சடங்குச் செலவுகள், மாணவர்களுக்கான பலன்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களுக்கான சேதங்கள் ஆகியவை அடங்கும்.

மருத்துவப் பலன்கள், மறுவாழ்வு (Rehabilitation) மற்றும் உதவியாளர் பராமரிப்பு (Attendant care) ஆகிய அத்தியாவசியப் பலன்கள் மட்டுமே இனி அனைத்து காப்புறுதிகளிலும் கட்டாயமாக இருக்கும்.

Surex காப்புறுதி நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்த விருப்பத்தேர்வுப் பலன்கள் அனைத்தையும் ஒரு சாரதி தவிர்த்தால், ஆண்டுக்கு $75 முதல் $100 டொலர்கள் வரை பிரீமியத்தில் (Premiums) சேமிக்க முடியும்.

இருப்பினும், Ratehub.ca இன் மோர்ஹன் ராபர்ட்ஸ் (Morgan Roberts) மற்றும் சட்ட நிபுணர் நைனேஷ் கோடக் (Nainesh Kotak) ஆகியோர் கூறுகையில், “இதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு மிகவும் குறைவு (மாதம் சில காபிகளின் விலை மட்டுமே).

ஆனால், ஒரு பெரிய விபத்து ஏற்பட்டால், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் போதிய காப்புறுதி இல்லாதவர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை இழந்து பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்” என எச்சரிக்கின்றனர்.

புதிய விதிகளின்படி, இந்த விருப்பத்தேர்வுப் பலன்கள் காப்புறுதிதாரர், அவரது துணைவர் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு (Dependents) மட்டுமே பொருந்தும்.

இதனால் விபத்துக்குள்ளாகும் பாதசாரிகள் (Pedestrians), சைக்கிள் ஓட்டுநர்கள் (Cyclists) மற்றும் சில பயணிகள் இனி இந்த கூடுதல் பலன்களைப் பெற தகுதியற்றவர்களாகலாம்.

தற்போதுள்ள காப்புறுதிகள் புதுப்பிக்கப்படும் போது (Renewal), காப்புறுதிதாரர்கள் எழுத்துப்பூர்வமாக மாற்றக் கோரினால் ஒழிய பழைய பலன்களுடனேயே புதுப்பிக்கப்படும்.

புதிய வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பலன்களை கவனமாகத் தெரிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles