டொராண்டோவில் போர்துகல் – குரோஷியா உலகக் கிண்ணப் போட்டி – $30,000 வரை விற்கப்படும் டிக்கெட்டுகள்!

டொராண்டோவில் (Toronto) வியாழக்கிழமை நடைபெறவுள்ள போர்துகல் (Portugal) மற்றும் குரோஷியா (Croatia) அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண (World Cup) நாக்-அவுட் சுற்றுப் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை மறுவிற்பனை இணையதளங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

SeatGeek மற்றும் StubHub போன்ற தளங்களில் சில டிக்கெட்டுகள் $30,000 டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுவதுடன், ஆகக்குறைந்த ஒரு டிக்கெட்டின் விலை $2,600 டாலர்களைத் தாண்டியுள்ளது.

பிபா (FIFA) மூலம் முதலில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் $335 முதல் $875 வரை மட்டுமே இருந்த நிலையில், தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) போர்துகல் மற்றும் குரோஷிய வம்சாவளி மக்கள் அதிகளவில் வசிப்பது இதற்கு காரணமென கூறப்படுகிறது.

உலகக் கால்பந்தாட்டத்தின் ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் லூகா மோட்ரிச் (Luka Modrić) ஆகியோரின் கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக இது அமையலாம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.

ஒன்றாரியோ (Ontario) அரசு அண்மையில் முகப்பு விலையை விட (Face value) அதிக விலைக்கு டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது.

இருந்த போதிலும், இத்தகைய தளங்களில் கட்டுப்பாடின்றி அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவது குறித்து நுகர்வோர் உரிமை மையத்தின் கொள்கை பணிப்பாளர் டேவிட் கிளெமென்ட் (David Clement) கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் ஸ்டீபன் கிராபோர்ட் (Stephen Crawford) தலைமையிலான அமைச்சு இது குறித்து இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles