ஒன்டாரியோவைச் சேர்ந்த ரோண்டா மக்டொனால்ட் (Rhonda MacDonald) என்ற 71 வயது பெண்மணி, தனது குடும்பச் சுற்றுலாவிற்காக ‘Vrbo’ இணையதளம் மூலம் கவார்த்தா லேக்ஸ் (Kawartha Lakes) பகுதியில் சுமார் 7,100 டாலர்கள் செலவில் சொகுசு வீடு (Cottage) ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார்.
கலிபோர்னியாவிலிருந்து வந்த அவரது மகள் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அங்கு சென்றபோது, அந்த வீடு மிகவும் அசுத்தமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வீட்டின் ஜன்னல் ஒன்று பலகையால் அடைக்கப்பட்டிருந்தது.
சமையலறை குளிர்சாதனப் பெட்டியில் பூஞ்சை காளான் பிடித்த உணவுகளும், அலமாரிகளில் எலி எச்சங்களும், அடுப்பு மற்றும் பார்பெக்யூ (Barbecue) சாதனங்களில் கடுமையான அழுக்குகளும் படிந்திருந்தன.
இதனால் விரக்தியடைந்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி, மாற்று தங்குமிடத்திற்காக மேலும் 7,400 டாலர்களைச் செலவிட வேண்டியதாயிற்று.
இது குறித்து CTV News ஊடகம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, தங்களது வாடிக்கையாளர் சேவை நிபுணர்கள் மூலம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த ‘Vrbo’ நிறுவனம், ரோண்டா மக்டொனால்டிடம் மன்னிப்புக் கோரியதுடன், அவர் செலுத்திய முழுத் தொகையையும் (Full Refund) தற்போது திருப்பி அளித்துள்ளது.










