கனடாவில் அடுத்தடுத்து இரண்டு வர்த்தக அட்டை கடைகளில் துணிகர கொள்ளை – 100,000 டொலர்களுக்கு மேல் நஷ்டம்!

கனடாவின் Greater Toronto and Hamilton Area (GTHA) பகுதியில் வர்த்தக அட்டை (Trading Card Game – TCG) விற்பனை நிலையங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் புதிய கட்டமாக, Ajax பகுதியில் உள்ள இரண்டு முன்னணி கடைகளில் புகுந்த முகமூடி அணிந்த கும்பல், பெருமளவிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

ஜூன் 14 அதிகாலை 5:45 மணியளவில் Salem Road North மற்றும் Taunton Road East சந்திப்புக்கு அருகில் உள்ள இக்கடையில் நான்கு முகமூடி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

அலாரம் சத்தம் கேட்டு Durham Regional Police அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. கடையில் இருந்த விலையுயர்ந்த அட்டைகளை அள்ளிச் சென்ற இக்கும்பலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன என மேலாளர் Marc Belmonte தெரிவித்தார்.

முதல் கொள்ளை நடந்து 15 நிமிட இடைவெளியில், Kingston Road West இல் உள்ள இக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

எதிர்வரும் கனடா தின (Canada Day) விசேட விற்பனைக்காக Sault Ste. Marie பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்ட $100,000இற்கும் அதிக மதிப்புள்ள விசேட Pokémon அட்டைகள் மற்றும் சேகரிப்புகள் திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் Kamal Lalli கவலையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் Durham Regional Police Service, இப்பகுதியில் இதுவரை 174 வணிக நிறுவன உடைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட இந்த இரண்டு கடைகளின் விசாரணைகள் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

இதேவேளை, கனடா முழுவதும் இவ்வாறான திட்டமிடப்பட்ட சில்லறை வர்த்தகக் குற்றங்கள் (Retail Crimes) அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக $9.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சில்லறை வர்த்தகக் குழுமத்தின் (Retail Council of Canada) ஆலோசகர் Rui Rodrigues சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles