பிராம்ப்டனில் உள்ள றோயல் சாலிஸ்பரி வே (Royal Salisbury Way) பகுதியில் உள்ள இரட்டைக்குடியிருப்பு வீடு (semi-detached home) ஒன்றில் நேற்றிரவு 11 மணியளவில் தீ பரவியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் உள்ளே இருந்து முதியவர் ஒருவரை மீட்டனர்.
அவருக்கு அவசர உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு அலகுகளைக் கொண்ட இந்த வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையிலேயே தீ விபத்து ஆரம்பமாகியிருக்கலாம் என பிராம்ப்டன் தீயணைப்புப் பிரிவு (Brampton Fire) தெரிவித்துள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை அலாரங்கள் (alarms) குறித்து ஒன்டாரியோ தீயணைப்பு மார்ஷல் (Ontario Fire Marshal) மற்றும் பீல் பிராந்திய பொலிஸார் (Peel police) இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










