பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!

பயண மருத்துவக் காப்பீடு (Travel medical insurance) இருந்தபோதிலும், மெக்சிகோ (Mexico) சென்ற ஒண்டாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக 1,47,502 டாலர்கள் (CAD) மருத்துவக் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒஷாவா (Oshawa) பகுதியைச் சேர்ந்த பஹோஸ் அலி (Bahoz Ali) என்பவர், கடந்த 2024 ஏப்ரலில் தனது காதலியுடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றார்.

பயணத்திற்கு முன்னதாக ‘மனுலைப்’ (Manulife) நிறுவனத்தின் ‘குளோபல் யூத் ஆல்-இன்க்ளூசிவ்’ (Global Youth All-Inclusive) பயணக் காப்பீட்டையும் அவர் பெற்றிருந்தார்.

மெக்சிகோ சென்ற இரண்டு நாட்களில் பஹோஸ் அலிக்கு தொடர் பக்கவாத நோய்த்தாக்கங்கள் (Seizures) ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

8 நாட்கள் அங்கு தீவிர சிகிச்சை பெற்ற பின், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கனடாவுக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆரம்பத்தில் கட்டணங்கள் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஓராண்டிற்குப் பிறகு அவரது காப்பீட்டு கோரிக்கை (Claim) நிராகரிக்கப்பட்டு, 1,47,502 டாலர்களைத் திருப்பிச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனம் கோரியுள்ளது.

பஹோஸ் அலி தனது பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் ஒரு மருத்துவரை அணுகியுள்ளார்.

காப்பீட்டு விதிகளின்படி, பயணத்திற்கு முந்தைய 90 நாட்கள் எந்தவொரு முன்கூட்டிய உடல்நலப் பாதிப்பும் (Pre-existing condition) இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் மீறியதாகக் கூறி மனுலைப் (Manulife) நிறுவனம் இந்த இழப்பீட்டை நிராகரித்துள்ளது.

கனடா மருத்துவர்கள் அந்த காய்ச்சலுக்கும் தற்போதைய பாதிப்பிற்கும் தொடர்பில்லை எனக் கூறியும், காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட இரண்டு மேல்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

பயணிகள் தங்களின் காப்பீட்டு விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles