பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!

ஒன்றாரியோவின் (Ontario) வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பிராம்ப்டனில் (Brampton), ஓட்டுநர் சோதனை மற்றும் உரிமம் வழங்கும் சேவைகளை எளிதாக்கும் வகையில் புதிய டிரைவ்-டெஸ்ட் (DriveTest) மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது

இந்த புதிய மையம் பிராம்ப்டனின் தெற்கு பகுதியில் உள்ள ‘ஷாப்பர்ஸ் வேர்ல்ட் பிராம்ப்டன்’ (Shoppers World Brampton) வணிக வளாகத்தில் அமைந்துள்ளது.

இங்கு கண் பரிசோதனை, எழுத்துப்பூர்வ அறிவுத்திறன் தேர்வுகள் மற்றும் வாகனங்களுக்கான (கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்கள்) வீதி தேர்வுகள் (Road tests) நடத்தப்படும்.

G1 உரிமத்திற்கான எழுத்துத் தேர்வை முன்பதிவு இன்றி நேரடியாகச் சென்று (Walk-in) எழுதலாம். ஆனால், G2 மற்றும் முழுமையான G வீதி தேர்வுகளுக்கு முன்கூட்டியே அனுமதி (Appointment) பெற வேண்டும்.

இதுவரை பர்ஸ்ட் கல்ப் பொலிவார்ட் (First Gulf Boulevard) பகுதியில் உள்ள ஒரேயொரு மையத்தையே மக்கள் நம்பியிருந்தனர்.

தற்போது இந்த 2-வது மையம் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் காத்திருப்பு நேரமும் அலைச்சலும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் நிறைந்த பகுதியில் இந்த புதிய மையம் அமைந்துள்ளதால், பிராம்ப்டன் (Brampton) பகுதி மக்கள் இதனை எளிதாக அணுக முடியும்.

Related Articles

Latest Articles