விமான அனுமதிப்பத்திர மோசடி – தகுந்த உரிமமின்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கிய முன்னாள் கேப்டன்

Air Canada விமான நிறுவனத்தின் முன்னாள் கேப்டன் ஒருவர், அதற்குரிய பிரதான உரிமம் (Licence) இன்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியுள்ளதாக Greater Toronto Area பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான “Project Icarus” என்றழைக்கப்படும் சிக்கலான மோசடி விசாரணை விபரங்களை, Peel Regional Police செவ்வாய்க்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடவுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என Air Canada உறுதியளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் முறையான வணிக ரீதியான விமான ஓட்டுநர் உரிமம் (Commercial Pilot Licence) பெற்றவர் என்றும், பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவர் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

எனினும், கனடாவில் பெரிய விமானங்களின் கேப்டனாகப் பணிபுரிய அவசியமான, எழுத்துமூல தேர்வுகள் மூலம் பெறப்படும் Airline Transport Pilot Licence (ATPL) அவரிடம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தவறைத் தொடர்ந்து, அந்த நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டு, இந்த விவகாரம் Transport Canada அமைப்பிற்குப் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக Air Line Pilots Association தெரிவித்துள்ளது.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles