றொரண்டோவில் வீடுகளின் விலை சரிவு – விற்பனை 6% அதிகரிப்பு!

றொரண்டோ (Toronto) பிராந்தியத்தில் வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

இருந்த போதிலும், கடந்த மே மாதத்தில் வீடுகள் விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக றொரண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை (TRREB) தெரிவித்துள்ளது.

றொரண்டோ பகுதியில் (Greater Toronto Area – GTA) கடந்த மே மாதத்தில் மொத்தம் 6,583 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

இது கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீத உயர்வாகும்.

அத்துடன், ஏப்ரல் மாதத்தை விட மே மாத விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், இங்கு வீடுகளின் சராசரி விற்பனை விலை கடந்த ஆண்டை விட 4.6 சதவீதம் குறைந்து $1,069,700 ஆகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், சந்தைக்கு வந்த புதிய வீடுகளின் வரத்து (New Listings) 18.9 சதவீதம் சரிவடைந்துள்ளதுடன், ஒட்டுமொத்த விற்பனைக்கான வீடுகளின் எண்ணிக்கையும் (Active Listings) 13.3 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போதைய சூழலில் வீடுகளை வாங்குபவர்களுக்கு விலையைக் குறைத்துப் பேசுவதற்கான அதிக வாய்ப்புகள் (Negotiating Power) உள்ளதாக TRREB இன் தலைமை தகவல் அதிகாரி ஜேசன் மெர்சர் (Jason Mercer) தெரிவித்துள்ளார்.

எனினும், வீடுகளின் வரத்தை விட விற்பனை தொடர்ந்து அதிகரித்தால், இந்த ஆண்டின் பிற்பாதியில் விலைகள் மீண்டும் உயரக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles