ரெக்ஸ்டேல் (Rexdale) அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

றொரண்டோ (Toronto) நகரின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக றொரண்டோ பொலிஸார் (Toronto Police) தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை சுமார் 8:00 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் (Queen’s Plate Drive) மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வார்ட் (Rexdale Boulevard) சந்திப்புப் பகுதிக்கு அவசர அழைப்பின் பேரில் பொலிஸார் விரைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

மறுமுனையில் சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles