கனடாவில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் முதியவர் – 14 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் சாத்தியம்!

கனடாவின் Ontario மாகாணத்தைச் சேர்ந்த 60 வயதான Kenneth Law, தனக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 14 முதலாவது நிலை கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குப் பதிலாக, தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக (Aiding suicide) சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை அவர் இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தளம் வாயிலாக ஆபத்தான இரசாயனப் பொருட்களை (Sodium nitrite) விற்பனை செய்து, சர்வதேச அளவில் பலரது தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Newmarket நகரில் கடந்த மாதம் இதற்கான வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நிலையில், அவரது சட்டத்தரணி Matthew Gourlay இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பார்சல்களை இவர் அனுப்பியுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரால் பாதிக்கப்பட்ட United Kingdom (U.K.) நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு தேசிய குற்றவியல் முகமை (National Crime Agency) அனுப்பியுள்ள அறிவிப்பில், Kenneth Law கனேடிய நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுவதால் அவரை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles