கனடாவின் டொராண்டோ (Toronto) நகரில் இரு பதின்ம வயதுடைய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரு இளைஞர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு, நோர்த் யார்க் (North York) பகுதியில் உள்ள Agate Road மற்றும் Wilson Avenue சந்திப்புப் பகுதியில் இந்த வன்முறை மோதல் நிகழ்ந்துள்ளது.
கத்திக்குத்து காயங்களுக்குள்ளான இரு இளைஞர்கள், சம்பவ இடத்திற்கு அருகிலிருக்கும் Humber River Hospital அவசர சிகிச்சைப் பிரிவிற்கு தாங்களாகவே நடந்து சென்று புகுந்துள்ளனர்.
இவர்களில் ஒரு இளைஞரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (Life-threatening) உள்ளதாகவும், மற்றவருக்கு உயிராபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த மூன்றாம் நபர் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆண் சந்தேக நபரைக் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவர் வெளிறிய நிறமுடைய (Light-skinned), 5 அடி 5 அங்குல உயரம் மதிக்கத்தக்க பழுப்பு நிற முனைகளைக் கொண்ட சுருள் கருப்பு முடி (Curly black hair with brown ends). உடையவர் என பொலிஸார் அடையாளம் கூறியுள்ளனர்.
நைக் (Nike) ட்ராக் பேண்ட் மற்றும் நியூ பேலன்ஸ் (New Balance) கருப்பு நிற காலணிகள் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் அடையாளங்களை கூறியுள்ளனர்.
