கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் முக்கிய வர்த்தக அமைப்பான Greater Vancouver Board of Trade நிகழ்வில் கலந்து கொண்டு தனது முக்கிய பொருளாதார கொள்கை உரையை ஆற்றினார்.
ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் புதிய வீடுகளுக்கான கட்டணங்களை 50% வரை குறைத்து, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திட்டத்தை, தற்போது B.C. மாகாணத்திலும் செயல்படுத்துவது குறித்து Premier David Eby உடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய உலகளாவிய சூழலில் மலிவு விலை (Affordability), ஆற்றல் பாதுகாப்பு (Energy Security) மற்றும் பூச்சிய உமிழ்வுக்கான (Net-Zero) பருவநிலை மாற்றம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கான கனடாவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக India மற்றும் ASEAN நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கனடாவின் மிகப்பெரிய துறைமுகமான Port of Vancouver மற்றும் மாகாணத்தின் இயற்கை வளங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை எஞ்சினாக விளங்கும் என்றார்.
மேலும், திட்டங்கள் தாமதமானால் முதலீடுகள் நாட்டின் பிற பகுதிகளுக்கு மாற்றப்படும் எனவும் எச்சரித்தார்.
