ப்ராம்ப்டனில் கொடூரம் – வாகனத்தின் அடியில் சிக்குண்டு ‘டோ ட்ரக்’ ஓட்டுநர் பரிதாப மரணம்!

கனடாவின் ப்ராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில், வாகனத்தின் அடியில் சிக்குண்டு ‘டோ ட்ரக்’ (Tow Truck) ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Steeles Avenue East) மற்றும் டொம்கென் வீதி (Tomken Road) சந்திப்பிற்கு அருகிலுள்ள 277 அட்வான்ஸ் பொலிவார்ட் (Advance Boulevard) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர் தனது ‘டோ ட்ரக்’கில் இருந்து வாகனம் ஒன்றை விடுவித்துக் கொண்டிருந்த (Unhooking) போது, எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் அவர் மீது ஏறியதில் அவர் வாகனத்தின் அடியில் சிக்குண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்காலப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி வழங்கி காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபரின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவத்தில் குற்றவியல் பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என பீல் பொலிஸ் அதிகாரி டெய்லர் ஹாப்பியார்ட் (Taylor Halfyard) தெரிவித்துள்ளார்.

இது ஒரு வேலைத் தள விபத்து என்பதால், இது தொடர்பான முழுமையான விசாரணைகளைத் தொழிலாளர் அமைச்சகம் (Ministry of Labour) பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles