ஒண்டாரியோவில் நூதன மோசடி – வீட்டு வாசலில் வந்து வேலை தருவதாகக் கூறி $3,000 சுருட்டல்!

கனடாவில் தற்போது வெப்பமான காலநிலை தொடங்கியுள்ளது.

இதனை சாதகமாக  பயன்படுத்தி வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்து தருவதாகக் கூறி வீடு வீடாக வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ஒண்டாரியோ (Ontario) மாகாண மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிக்கரிங் (Pickering) நகரைச் சேர்ந்த ஹெய்டி ஏப்ரில் (Heidi Aprile) என்பவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு நடைபாதை கற்களைச் (Stonework) சீரமைத்துத் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வேலையைத் தொடங்கிய சில மணிநேரத்திலேயே, முன்பணமாக $3,000 பெற்றுக் கொண்ட அந்த நபர்கள், அதன் பின்னர் வேலையை முடிக்காமல் தலைமறைவாகிவிட்டனர்.

‘காம்பாக்ட் மேசன்றி அண்ட் ரூஃபிங்’ (Compact Masonry and Roofing) என்ற பெயரில் வழங்கப்பட்ட முகவரியில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறையான நிறுவனங்கள் வீடு வீடாக வந்து அச்சுறுத்தும் வகையில் வியாபாரம் செய்ய மாட்டார்கள் என்றும், வேலையை முடிக்கும் முன்பே முழுப் பணத்தையும் கேட்க மாட்டார்கள் என்றும் லேண்ட்ஸ்கேப் ஒண்டாரியோ (Landscape Ontario) அமைப்பின் இயக்குனர் ஜோ சலேமி (Joe Salemi) எச்சரிக்கிறார்.

எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் முன் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் விலை மதிப்பீடுகளைக் (Quotes) கோருமாறும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட்டும் அணுகுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles