கனடியப் பராமரிப்பாளர்கள் சந்திக்கும் நெருக்கடி – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

கனடாவில் ஊதியமின்றித் தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் (Caregivers), நிதி மற்றும் மன ரீதியான பாரிய நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ‘கனடியப் பராமரிப்புச் சிறப்பு மையம்’ (CCCE) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவில் 77 சதவீத பராமரிப்பாளர்கள் தங்கள் நல்வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) மட்டும் 74 சதவீத பராமரிப்பாளர்கள் பதற்றம் அல்லது கவலையுடனும், 18 சதவீதத்தினர் மனச்சோர்வுடனும் (Depression) காணப்படுகின்றனர்.

கனடியப் பராமரிப்பாளர்களில் அரைவாசிப் பேரும் (49%), பி.சி.-யில் 65 சதவீதத்தினரும் நிதி ரீதியாகத் திணறி வருகின்றனர்.

ஐந்தில் ஒரு பராமரிப்பாளர் மாதம் 1,000 டொலர்களுக்கும் மேல் சொந்தப் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

பராமரிப்பிற்கான பணத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக நேரம் வேலை செய்ய வேண்டியுள்ள அதேவேளை, பராமரிப்புப் பணிக்கான நேரத் தேவையால் வேலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் ஒரு ‘விசித்திரச் சுழற்சியில்’ சிக்கியுள்ளனர்.

பி.சி.-யில் 62 சதவீத பராமரிப்பாளர்கள் அரசாங்கத்திடமிருந்து தமக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை எனக் கருதுகின்றனர்.

பொது வீட்டுப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்துவோர் விகிதம் தேசிய அளவை விட இங்கு மிகக் குறைவாகவே உள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் நம்மில் பாதிப் பேர் பராமரிப்பாளர்களாக மாற வேண்டியிருக்கும் என CCCE அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் லிவ் மெண்டல்சோன் (Liv Mendelsohn) எச்சரித்துள்ளார்.

பராமரிப்பாளர்கள் மாதாந்த பராமரிப்பு கொடுப்பனவு (Caregiving allowance), எளிமையான வரிச் சலுகைகள் மற்றும் இலவச மனநல ஆலோசனைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கம் சில முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறினாலும், அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பொது ஆதரவுத் திட்டங்கள் போதுமானதாக இல்லை எனப் பராமரிப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles