கனடாவில் சிறுவன் கடத்தல் – முன்னாள் ரியல் எஸ்டேட் முகவருக்கு சிறை – இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு!

கனடாவின் தெசலோன் (Thessalon) பகுதியில் சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக மனோஜ் கோவிந்தபாலுநிகம் (Manoj Govindbalunikam) என்ற 37 வயது நபருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆகஸ்ட் 15 அன்று, மஞ்சள் நிற செவ்ரோலெட் கமெரோ (Chevrolet Camaro) காரில் வந்த மனோஜ், ஒரு சிறுவனுக்கு பொம்மை மற்றும் ஐஸ்கிரீம் வழங்கி, தனது காரில் ஏற்றியுள்ளார்.

சிறுவன் தனது வீட்டு முகவரியைச் சொல்லியும், வீட்டைத் தாண்டியும் காரை நிறுத்தாமல் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் தந்தை காரை வழிமறித்துத் தனது மகனை மீட்டெடுத்தார்.

அடுத்த நாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மனோஜின் கைபேசியில், அந்தச் சிறுவனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டன.

தனது செயலை ஒரு கலாச்சாரத் தவறு‘ (Cultural Misunderstanding) என்று மனோஜ் வாதிட்டார்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனடாவில் வசிக்கும் ஒருவர் இத்தகைய செயலை அப்பாவித்தனமான தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது என நீதிபதி மைக்கேல் என். வர்பியோ (Michael N. Varpio) நிராகரித்தார்.

கனடிய சட்டப்படி, 6 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெறும் புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.

மனோஜிற்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனோஜ் கோவிந்தபாலுநிகம் இந்தியாவில் விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பட்டமும் றொரண்டோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) முதுகலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles