லம்ப்டன் கல்லூரி (Lambton College) கொலை வழக்கு – தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சார்னியா லம்ப்டன் கல்லூரியில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாகத் தலைமறைவாக இருந்த 24 வயது கியாவ் “சின்” டோ (Kyaw “Chin” Doe) என்பவரை, லண்டன் (London) நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

அவர் இறுதியில் பொலிஸாரிடம் சரணடைந்தார்.

இவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம், இரண்டு கொலை முயற்சிகள் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்தமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 அதிகாலை, லம்ப்டன் கல்லூரியின் Lions Den Pub உணவகத்தில் நடந்த மோதலில் 20 வயது டேன் நிஸ்பெட் (Dane Nisbet) சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இவரைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ஏற்கனவே $50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இந்தக் கைது நடவடிக்கை உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்குச் சிறிய ஆறுதலைத் தரும் என நம்புகிறோம்” என சார்னியா பொலிஸ் தலைமை அதிகாரி டெரெக் டேவிஸ் (Derek Davis) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles