கனடாவில் உணவுப் பொருட்கள் அதீத விலை உயர்வு – இலவச மளிகைப் பொருட்களுக்காக மைல்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

கனடாவில் மளிகைப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், அன்றாட உணவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சமூக உதவி அமைப்புகளை நாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கல்கரி (Calgary) நகரில் குரு நானக் ப்ரீ கிச்சன்‘ (Guru Nanak Free Kitchen) என்ற தொண்டு நிறுவனம் வழங்கிய 80,000 பவுண்டு உருளைக்கிழங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காக மக்கள் பல மணிநேரம் கடும் குளிரிலும் வரிசையில் காத்திருந்தனர்.

கனடா புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, மளிகைப் பொருட்களின் விலை ஆண்டுக்கு 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

“ஏனைய கட்டணங்களை விட மளிகைச் செலவு தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வருமானம் அதிகரிப்பு பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்காததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் எனப் பொருளாதாரப் பேராசிரியர் மோஷே லேண்டர் (Moshe Lander) சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பது மற்றும் சந்தையில் போட்டியை அதிகரிப்பது குறித்து பெரிய அளவிலான மளிகை விற்பனை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அல்பர்ட்டா (Alberta) மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

வழமையாக உணவு உதவி பெறாதவர்கள் கூட, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியால் இத்தகைய உதவி மையங்களைத் தேடி வரும் நிலை அதிகரித்துள்ளதாகத் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33

Related Articles

Latest Articles