வர்த்தகப் போருக்குத் தயாராகும் கனடா – நாடாளுமன்றக் குழுக்களில் லிபரல் கட்சியின் அதிரடி மாற்றம்!

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், கனடா தனது நிலையை வலுப்படுத்தப் புதிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக வணிகம் மற்றும் அரசியல் தலைவர்கள் அடங்கிய ஒரு பலமான ஆலோசனைக் குழுவை அறிவித்துள்ளார்.

கனடாவின் மதுபானத் தடையை ஒரு பிரச்சினையாக அமெரிக்கா முன்வைக்கிறது.

இருப்பினும் “உலோகங்கள் மற்றும் வாகனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளே உண்மையான விதிமீறல்கள்” என பிரதமர் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் லிபரல் கட்சி (Liberals) தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 12-ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் (Conservatives) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் மீதான விசாரணைகளையும், புதிய சட்டத்திருத்தங்களையும் லிபரல் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மார்க் கார்னி தனது முதலாவது வசந்தகால பொருளாதார அறிக்கையை (Spring Economic Statement) வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தாய் ஒருவர் உட்பட 4 உயிர்களைப் பறித்த விபத்து!
01:28
Video thumbnail
பிராம்ப்டனின் புதிய முகம் - மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!
01:21
Video thumbnail
பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து - மாணவருக்கு காயம்!
01:21
Video thumbnail
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் – சிறைக்காவலர் சத்தியகாந்தனுக்கு 26 மாத சிறைத்தண்டனை!
01:15
Video thumbnail
FIFA உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை - மணிநேரக் காத்திருப்பால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!
01:14
Video thumbnail
ஹாமில்டனில் பரபரப்பு: கைவிலங்குடன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞர்!
00:50
Video thumbnail
ஆன்லைன் பயங்கரவாத வலையில் சிக்கிய சிறுமி! - '764' குழுமம் குறித்து தந்தை பகீர் எச்சரிக்கை!
01:26
Video thumbnail
விமான எரிபொருள் தட்டுப்பாடு - கனடியர்களின் கோடைகால பயணங்களில் திடீர் மாற்றம்!
01:07
Video thumbnail
றொரண்டோவில் இந்தியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
01:07
Video thumbnail
றொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்!
01:01

Related Articles

Latest Articles